Gruha Bedham Or Sruthi Bedham !
ஸ்ருதி பேதம் என்றால் என்ன ?
ஒரு ராகத்தின் ஆதார ஷட்ஜம் எதுவோ அதை எடுத்துக்கொள்ளவும்.
உதாரணமாக தோடி ராகத்தை எடுத்துக்கொண்டால்,
ஸ ரி1 க2 ம1 ப த1 நீ2 ஸ
ஸ நீ2 த1 ப ம1 க2 ரி1 ஸ
இப்பொழுது இதில் ஆரோகணத்தில் உள்ள ஷட்ஜம் ஸ்வரத்தை அதே தோடி ராகத்தில்
உள்ள ரிஷபத்துக்கு எடுத்துச் செல்லவும். சென்று அதை ஷட்ஜம் என வைத்துக்கொள்ளவும். (அதே போல,க2 ரி1 ஆகவும், ம1 க2 ஆகவும் முறையே ஆகும்) இதனால் கல்யாணியின் ரி1 தோடியின் க போல் கேட்கப்படும்.
இதே போல தோடியின் ஷட்ஜத்தை அதே தோடியின் கா ந்தாரத்துக்கு மாற்றி அதை
ஷட்ஜமாக ஏற்று மற்ற ஸ்வரங்களை அதே வரிசையில் அமைத்தால் நிகழ்வது
ஹரி காம்போஜி.
இதுபோல தோடியின் ஆதார ஸ்வரமான ஷட்ஜத்தை ரிஷபம், கான்தாரம், மத்யமம்,என்ற வரிசையாக மாற்றும்போது கிடைக்கும் ஜன்ய ராகங்கள் : கல்யாணி,ஹரி காம்போதி, நட பைரவி, சங்கராபரணம், கரஹரப்ரியா. (தோடியின்
பஞ்சமத்தில் ஸ்ருதி பேதம் ஏற்படும்போது ஒரு ராகத்திற்கு இரண்டு மத்யமங்கள் நிகழ்வதை கவனிக்கவும்)
உதாரணமாக, வசந்த ராக மத்யமத்தில் ச்ருதி பேதம் :
ஸ நீ3 த 1 ப ம2 க 3 ஸ
ரமணி என்னும் ராகம் வருகிறது.
இப்போது அ ந்தி மழை எனும் பாடலைக் கேட்போம். Courtesy: Shasun
LET US PROCEED TO CLASSICAL CARNATIC NOW .
Perhaps in instrumental field, we may be able to understand this better.
Prasanna playing the grand carnatic raga Karaharapriya and does graha bedham at the nishada to bring out an extensive treatment of the raga Sankarabharanam. and goes back to Karaharapriya. From live concert at YGP auditorium, Chennai, India on Dec 24, 2006.
I shall try to enunciate further on this topic, volatile protests from my
orthodox grammarian sister notwithstanding.