Pages

Monday, May 10, 2010

என்னைக் கவர்ந்த பாடகர்கள்.

நான் மிகவும் மதிக்கும் ஆன்மீக இலக்கிய சரித்திர பதிவாளர் திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள் என்னையும் ஒரு பொருட்டாக எண்ணி , " எனக்குப் பிடித்த பாடகர்கள் " என்று தலைப்பிலே எழுதுமாறு ஒரு இ மெயில் இட்டிருந்தார்கள். அவர்களுக்கு நன்றி சொல்லும் அதே நேரத்தில், இதை படிக்கும் வாசகர்களுக்கு ஒரு விக்ஞாபனம்.

          சங்கீதம் என்பது ஒரு பாற்கடல். அந்த பாற்கடலின் ஜலப்ரவாஹம் ஸ்வர ஞானம். அந்த ஜல சமுத்ரத்தில் அசலமாகவும் அதே சமயம் ஆச்ரயமாகவும் பெருமாள் பள்ளி கொண்டிருக்கும் படுக்கையான  ஆதி சேஷன் போன்றது ஸ்ருதி.  அப்படுக்கையில் நிஸ் சலமாக சயனித்திருக்கும் பெருமாள் போன்றது லயம்.  ஸ்ருதி மாதா லயம் பிதா என்பது வாக்கியம்.
           அந்த பள்ளி கொண்ட பெருமாளின் நாபிக் கமலத்தில் வீற்றிருக்கும் தாயார் ஆகப்பட்டவள் எப்படி உபாசிக்கப்பட வேண்டுமோ அதுபோல் சங்கீத வித்வான்கள் போற்றப்படவேண்டும்.   எப்படி மஹா லக்ஷ்மியான  தாயார் வழியாகத்தான் பெருமாளை அறிந்து சரணம் அடைகிறோமோ அதுபோலவே நன்கு கற்றுணர்ந்த வித்வான்கள் வழியாகத்தான் சங்கீதத்தை அனுபவிக்க முடியும்.  இது சாஸ்திர சம்மதம்.
           நிற்க. இந்த வலைப்பதிவின் அடித்தளமே சாஸ்த்ரீய சங்கீதத்தின் அடிப்படையில் இன்று நிலவும் பாடல்களை அலசுவதுதான், புரிந்துகொள்வதுதான்.  கடந்த அறுபது ஆண்டுகளாக நாம் பார்ப்பது என்னவென்றால், எந்த சினிமா பாடல்கள் சாஸ்த்ரீய சங்கீதத்தை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்டு இசைக்கப்பட்டனவோ அவைதான் இன்னமும் காதுகளில் ஒலித்து கொண்டு இருக்கின்றன.  மற்றவை எல்லாம் சுனாமி அலைகள் போல வந்து போய்விடுகின்றன.  நிலைத்து நிற்பது கிளாசிகல் ம்யுசிக் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.  ( ஆன்மிகம் பற்றிய பதிவுகளை இன்னமும் பத்து, பதினைந்து வருஷங்கள் கழித்து கூட படிக்கலாம். சுவையாகவே இருக்கும். திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள் பதிவு ஒரு உதாரணம்.திரு ஜீவா பதிவு மற்றும் ஒரு உதாரணம்.   மற்ற  பல  பதிவுகள் தத்க்ஷனம் ருசியாக இருக்கின்றன.  பால் கோவா மாதிரி. தொடர்ந்து இருக்குமா ? தெரியவில்லை. அது போலத்தான். )
              இன்னொரு விஷயம்.  பாடகர்களில் இவர் எனக்கு மிகவும் பிடிக்கும், என்று சொல்வதெல்லாமே, தித்திப்பு பக்ஷனங்களில் எனக்கு ஜிலேபி பிடிக்கும், லட்டு பிடிக்கும், குலோப் ஜாமுன்  பிடிக்கும், இல்லை அல்வா பிடிக்கும், அல்வாவிலும் கோதுமை அல்வா பிடிக்கும் என்று சொல்வது போலத்தான். ஏன் இது பிடிக்கிறது, அது அவ்வளவா பிடிக்கவில்லை என்பது அவர்களுக்கே விளக்கி சொல்ல இயலாது.  காரணம் சாப்பிடும்போது அதன் சுவையிலே ஊன்றிப்போய்விடுவது தான். சொல்லப்போனால் அதுவாகவே ஆகிவிடுகிறோம்.  சிவாஜி நடிப்பு பிடிக்கிறது . ஏன் ! சிவாஜி நடிக்கவில்லை. யாராக நடிக்கிறாரோ அவராகவே ஆகிவிடுகிறார். மகாராஜபுரம் சந்தானம் எனக்கு பிடித்த பாடகர் என்றால் உங்களுக்கு பிடித்திருப்பது அவர் குரலா ?சாரீரமா ? சுருதியா ? லயமா ? நளினமா ? கம்பீரமா ? சாஹித்ய உச்சரிப்பா ? அவர் பாடும்போது நிதர்சனமாகப் புலப்படும் உணரப்படும் ஸ்ரத்தையா ?  இல்லை, இவை எல்லாமே கலந்த ஒன்றா ? அல்ல !! இவைக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒன்றா ?  த்விஜாவந்தி ராகத்தில் அகிலாண்டேஸ்வரி கீர்த்தனை எம்.எஸ். பாடகேட்டாலும், பால முரளி பாட கேட்டாலும், ஜேசு தாஸ் பாட கேட்டாலும் ராக லக்ஷன சம்பிரதாயங்களில் ஏதேனும் வித்தியாசம் தெரிகிறதோ ? எல்லோருமே தத்தம் ஞானத்தை சாமர்த்தியத்தை பிரதர்சனம் செய்கிறார்கள்.  இருந்தாலும் இந்த பாட்டை இவர் பாடித்தான் கேட்க வேண்டும் என்று ஏன் சொல்கிறோம் ?
               லோகோ பின்ன ருசிஹி என்று பெரியவா சொன்னது போல ஒவ்வொத்தருக்கு ஒன்றொன்று பிடிக்கும்.  ஒருவருக்கு  பிடித்தது அடுத்தவருக்கும்  பிடிக்கவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.  அப்படி எல்லாருக்கும் ஒன்றே பிடிக்கும் பட்சத்தில் லோகத்திலே பார்வர்ட் மூவ்மென்ட் இருக்காது.
               லோகத்திலே இருக்கிற பாடகர்களிலே அஞ்சு பேரை மட்டும் தேர்ந்து எடுப்பது ரொம்பவும் சிரமம். இருந்தாலும் எனக்கு குறையொன்றும் இல்லை.
               இந்த முன்னுரையுடன் எனக்கு பிடித்த பாடகர்கள் என்பதை விட என்னைக் கவர்ந்த ஆகர்ஷித்த பாடகர்கள் யார் என சொல்கிறேன்.
               
என்னைக் கவர்ந்த பாடகர்கள்.
அமெரிக்காவில் பிறந்து தமிழ் நாட்டிற்கு வந்து சாஸ்திரிய சங்கீதத்தில் நிபுணத்வம் பெற்றவர்  திரு ஜான் ஹிக்கின்ஸ் அவர்கள்.  தமது குரலால் கேட்பவர்களை மயக்கியவர் இவர்.  அவரது குரலில் மயங்கி போய்தான் காலனும் அவரை சீக்கிரமே தன்னிடம் அழைத்துக்கொண்டு விட்டானோ என்னவோ !!  இவரை சுமார் ஐம்பது ஆண்டுகட்கு முன்பு நேரடியாக திருச்சியில் எங்கள் வீட்டுக்கு எதிர் இருந்த எனது நண்பர் ராம்ஜி அவர்கள் வீட்டில்  சந்தித்து அவர் பாடல் தேவ காந்தரியில் " எந்நேரமும் உன்னை " கேட்டது எனக்கு இன்னமும் நினைவில் இருக்கிறது.

இப்போது நாம் கேட்கப்போவது வியாசராயர் எழுதிய  கிருஷ்ண நி பேகன பாரோ என்னும் பிரபலமான  பாடல். ராகம் யமுனா கல்யாணி.


சிந்து பைரவி ராகத்தை எப்படி ஒரு ப்யுஷன் ஆகபாடுகிறார் காருநீஷ் என்னும் பாடகர்
நான் கண்டேன் நான் கண்டேன்

நந்த குமரனை , நதி கரை ஓரத்திலே

Please cut and paste the following URL, if u r not taken there.

http://old.musicindiaonline.com/p/x/jJX4eWe3Mt.As1NMvHdW/?done_detect


 காவேரிக்கரையில் மரமாக இருந்தால் வேறுக்கு யோகமடி.
என்று பாடுபவர் குரல் எத்தனை கணீர் என்று இருக்கிறது கேளுங்கள்.


இவர் பழைய காலத்து பாடகர் தான்.பராசக்தி படம் வந்த போது பாடல்கள் பல பாடி புகழ் பெற்றவர். சோக கீதம் பாடுவதிலே இவரது தனித்தன்மை தெரிகிறது.  இவர் குரல் என்னை எப்போதுமே இழுக்கும்.
அன்பாலே தேடியே என் அறிவு செல்வம் தங்கம் ... சி. எஸ். ஜெயராமன்.
anbale thediya en arivu selvam thangam...CS ஜெயராமன்
ப்ளீஸ் கிளிக் செய்யுங்கள் அல்லது பின் குறிப்பிட்ட யு.ஆர். எல். ஐ. கட் செய்து பேஸ்ட் செய்யுங்கள்.

http://www.oldtamilsong.net/C.S.Jayaraman%201/06%20Anbale%20Thediyai.mp3

பகுதாரி என்னும் ராகத்தில் சி. எஸ். ஜெயராமன் பாடிய இன்னொரு பாடல் இங்கே 
படம் சம்பூர்ண ராமாயணம்.  இன்று போய் நாளை வா ..

 மாய பஜார் படம்.  நான் பார்த்த முதல் தமிழ் சினிமா படம். நான் ரசிப்பது ஆண் குரல்.

ஆஹா இன்ப நிலாவினிலே ..  (இதைப் பார்த்துவிட்டு, தக்குடு எதிர்காலக் கனவில் முழ்கினால் அதற்கு நான் பொறுப்பல்ல. )


நான் ஒரு தியேட்டரின் சென்று பார்த்த கடைசி படம் இது தான்.  தஞ்சையில் பார்த்தேன் என்று நினைக்கிறேன். படம்..வைதேகி காத்திருந்தாள்.
கடைசி இதுதான்.  ஆபோகி ராகத்தில் ஒரு அருமையான பாட்டு.  பெண் குரல் யாரது ?  யார் பாடுகிறார் ?



சொல்லிக்கொண்டே போகலாம். சங்கீதம் ஒரு அளவிலா ஆழி . முடிவிலா கடல்.  அக்கடலிலே முது எடுப்பது எல்லோருக்கும் முடியாது. இருப்பினும் எப்போதும் குளித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்றும் மனம் சொல்வது இயற்கைதானே !!!

முடிவாக ஒரு பாடகரை ரசிக்கிறோம் . அவர் பாடல் கவர்கிறதா ? அவர் குரல் வசீகரிக்கிறதா ? அவர் பாடல் பாடும் சூழ்நிலை மனம்  நெகிழ செய்கிறதா ?  ராகமா ?  தாளமா ?  லயமா  ?  சுருதியா ? இல்லை, எல்லாம் சேர்ந்தா ?
பாடகர்கள் பல விதம் போல, ரசிகர்களும்  பல விதம். ஒவ்வொருவரும் தனி விதம்.



5 comments:

அபி அப்பா said...

பிரமாதம்!!! சி.எஸ்.ஜெயராமன் என் லிஸ்ட்டிலே உட்காந்து இருக்காரே!! ஓக்கே இருந்துட்டு போகட்டும். அவரையும் சேர்த்தே எழுதுகிறேன்!!!

அருமையான பகிர்வு! வாழ்த்துக்கள்!!!

Geetha Sambasivam said...

சும்மாவானும் அருமைனு சொல்றது சரியில்லை. லா.ச.ரா. அவர்களின் எழுத்தைப் பற்றி ஜீவி எழுதி இருப்பதைச் சில நாட்கள் முன்னே தான் படிச்சேன். கிட்டத்தட்ட அதே மாதிரியான எழுத்தோட்டம் முன்னுரையிலே. மனதைத் தொடும் வரிகள் ஒவ்வொன்றும். நீங்க குறிப்பிட்டிருக்கும் பாடல் எல்லாமே எனக்கும் பிடித்தவையே.

தேர்ந்தெடுக்கிறதும் கஷ்டமாத் தான் இருக்கு. மற்றபடி அருமையான தேர்வு.

"ஆஹா, இன்ப நிலாவினிலே" அந்த டச் இருக்கு பாருங்க தக்குடுவுக்கு ஒரு குட்டு, அதுதான் ரொம்பப் பிரமாதம். நல்ல பஞ்ச் டயலாக்.

நன்றி என் அழைப்புக்கு உடனடியாக பதில் அளித்துப் பதிவும் போட்டதுக்கு.

தக்குடு said...

Present sir!...:))

Matangi Mawley said...

"இன்று போய் நாளை வா"- நான் அத திலங் நு நெனச்சேன்! பஹுதாரி அதுன்னு சொன்னதுக்கு ஒரு நன்றி! எல்லாமே ரொம்ப நல்ல பாடல்கள்!
அன்பாலே தேடிய என் அறிவு செல்வம் தங்கம்( தெய்வப்பிறவி ?) எனக்கு ரொம்ப பிடித்த பாடல்களில் ஒன்று!
தக்குடு பத்தி தெரியாது.. ஆனா- ஆஹா இன்ப நிலாவினிலே பாட்டு கேட்டா எனக்கு கனவுகள் பல தாக்க ஆரம்பிச்சுடும்! சின்ன வயசிலேர்ந்து கேட்டு ரசித்த பாடல் அது! எனக்கும்.. அத போல boat ல போகணும்னுஆச!


good!

Anonymous said...

ungal padivugal migavum arumai

vaidegi kathirundal padalai
paadiyavar
vani jayaram

ranganathan