Pages

Tuesday, June 10, 2008

Sruthi Bedam or Graha Bedam

Gruha Bedham Or Sruthi Bedham !
ஸ்ருதி பேத‌ம் என்றால் என்ன‌ ?
ஒரு ராக‌த்தின் ஆதார‌ ஷ‌ட்ஜ‌ம் எதுவோ அதை எடுத்துக்கொள்ள‌வும்.
உதார‌ண‌மாக‌ தோடி ராக‌த்தை எடுத்துக்கொண்டால்,
ஸ‌ ரி1 க‌2 ம‌1 ப‌ த‌1 நீ2 ஸ‌
ஸ‌ நீ2 த‌1 ப‌ ம‌1 க‌2 ரி1 ஸ‌

இப்பொழுது இதில் ஆரோக‌ண‌த்தில் உள்ள‌ ஷ‌ட்ஜ‌ம் ஸ்வ‌ர‌த்தை அதே தோடி ராக‌த்தில்
உள்ள‌ ரிஷ‌ப‌த்துக்கு எடுத்துச் செல்ல‌வும். சென்று அதை ஷ‌ட்ஜ‌ம் என‌ வைத்துக்கொள்ள‌வும். (அதே போல‌,க‌2 ரி1 ஆக‌வும், ம‌1 க2 ஆக‌வும் முறையே ஆகும்) இத‌னால் க‌ல்யாணியின் ரி1 தோடியின் க‌ போல் கேட்க‌ப்ப‌டும்.

இதே போல‌ தோடியின் ஷ‌ட்ஜ‌த்தை அதே தோடியின் கா ந்தார‌த்துக்கு மாற்றி அதை
ஷ‌ட்ஜமாக‌ ஏற்று ம‌ற்ற ஸ்வ‌ர‌ங்க‌ளை அதே வ‌ரிசையில் அமைத்தால் நிக‌ழ்வ‌து
ஹ‌ரி காம்போஜி.

இதுபோல‌ தோடியின் ஆதார‌ ஸ்வ‌ர‌மான‌ ஷ‌ட்ஜ‌த்தை ரிஷ‌ப‌ம், கான்தார‌ம், ம‌த்ய‌மம்,என்ற‌ வ‌ரிசையாக‌ மாற்றும்போது கிடைக்கும் ஜ‌ன்ய‌ ராக‌ங்க‌ள் : க‌ல்யாணி,ஹ‌ரி காம்போதி, ந‌ட‌ பைர‌வி, ச‌ங்க‌ராப‌ர‌ண‌ம், க‌ர‌ஹ‌ர‌ப்ரியா. (தோடியின்
ப‌ஞ்ச‌ம‌த்தில் ஸ்ருதி பேத‌ம் ஏற்ப‌டும்போது ஒரு ராக‌த்திற்கு இர‌ண்டு ம‌த்ய‌ம‌ங்க‌ள் நிக‌ழ்வ‌தை க‌வ‌னிக்க‌வும்)

உதார‌ண‌மாக‌, வசந்த‌‌ ராக‌ ம‌த்ய‌ம‌த்தில் ச்ருதி பேத‌ம் :
ஸ‌ நீ3 த‌ 1 ப‌ ம‌2 க‌ 3 ஸ‌
ர‌ம‌ணி என்னும் ராக‌ம் வ‌ருகிற‌து.
இப்போது அ ந்தி ம‌ழை எனும் பாட‌லைக் கேட்போம். Courtesy: Shasun



LET US PROCEED TO CLASSICAL CARNATIC NOW .
Perhaps in instrumental field, we may be able to understand this better.

Prasanna playing the grand carnatic raga Karaharapriya and does graha bedham at the nishada to bring out an extensive treatment of the raga Sankarabharanam. and goes back to Karaharapriya. From live concert at YGP auditorium, Chennai, India on Dec 24, 2006.




I shall try to enunciate further on this topic, volatile protests from my
orthodox grammarian sister notwithstanding.

8 comments:

jeevagv said...

Thanks for post Sir, I was expecting something like this!
I hwas wondering whether there's a grahabedam in the song 'Gangai Yamunai IngiThAn Sangamam..' between Mohanam and Madyamvathi.
May be you can answer the IsaiInbam question from Shrikanth K.Moorthy:
http://isaiinbam.blogspot.com/2008/02/dating.html
Expert Opinion please!

sury siva said...

Welcome to Jeeva

தங்கள் வருகைக்கு மனமார்ந்த நன்றி.
இன்றைக்கும் இசையை இலக்கண சுத்தமாக தரக்கூடிய‌
வல்லுனர்களிடம் ஸ்ருதி பேதம் பற்றி கருத்து ஒற்றுமை
அவ்வளவாக இல்லை. ஒரு சாரார் ( கர்னாடக சங்கீதத்தை
அதன் கட்டுப்பாட்டுக்குள் within the parameters defined
ஸ்வர ஸஞ்சாரங்களுக்குள் தான் வைத்துக்கொள்ளவேண்டும்
என்பவர்கள் , நன்றாக இலக்கணம் தெரிந்தவர்கள் ) இதைப்
பற்றி பேச ஆரம்பித்தாலே முகம் சுளிக்கின்றனர். அதே சமயம்
நன்றாக பாடக்கூடியவர்கள் பலர் ஸ்ருதி பேதத்தினை ஆமோதிக்கிறார்கள்.
நான் நினைக்கிறேன் : ஸ்ருதி பேதம் கர்னாடக சங்கீத்தின் evolutionary
process
ல் ஒரு நிலை. துவக்கத்தில் இருந்த மேள கர்த்தா ராகங்கள், ஜன்ய ராகங்கள்
இவைகளிலிருந்து இன்றைய தேதியில் இருக்கும் சுமார் 7000 ராகங்கள்
இதுபோல ஒரு ப்ராஸஸில் தான் தோன்றியிருக்கக்கூடும்.
உங்களுக்கு ஒரு செய்தி தெரியுமா ? ஜி.என். பி . அவர்கள் தான்
இந்த ஸ்ருதி பேதத்தின் முன்னோடி.
அவர் வழி வந்த வல்லுனர் இதை ஆமோதிக்கின்றனர். மற்றவர்
இதனுடன் மோதிக்கின்றனர்.

மேன் மேலும் எழுதுகிறேன்.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.

ராமலக்ஷ்மி said...

தங்கள் திண்ணையை சங்கீத (விவாத) மேடையாகப் பார்க்கின்றேன். சங்கீதம் ஒரு கடல். அதைப் பற்றி விரிவாக எதுவும் தெரியாது. ஆனால் நல்ல சங்கீதத்தை ரசிக்கத் தெரியும். எனக்குப் பிடித்த அப் பாடலை தங்கள் திண்ணையில் இளைப்பாறி கேட்டு மகிழ்ந்தேன். நன்றி சார்!

sury siva said...

ராமலக்ஷ்மி said...


// எனக்குப் பிடித்த அப் பாடலை தங்கள் திண்ணையில் இளைப்பாறி கேட்டு மகிழ்ந்தேன். நன்றி சார்!//

எங்க வீட்டுத்திண்ணை வந்து உட்கார்ந்தீர்களா !

அடடா! தெரியவில்லையே !

வீட்டுக்குள் அழைத்து மஞ்சள் குங்குமம் கொடுத்து
ஒரு டிகிரி காபி கொடுத்திருந்து எங்களை நாங்களே
கெளரவிப்படுத்திக் கொண்டிருப்போமே !

பரவாயில்லை..

தமிழ் உலக தியாகராஜராக போற்றப்படும் பாபனாசம் சிவன் பாடல்களை
அதே திண்ணையிலிருந்து பாடுகிறார்கள்.

சிவாஜி கணேசன், பானுமதி நடிச்ச படமும் இருக்கு.

சுப்பு ரத்தினம்.

ராமலக்ஷ்மி said...

//ஒரு டிகிரி காபி கொடுத்திருந்து எங்களை நாங்களே
கெளரவிப்படுத்திக் கொண்டிருப்போமே !//

அய்யா! எனக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கட்டுமே. மீனாட்சிப் பாட்டியுடன் எனது திண்ணைக்கு வந்து சற்றே இளைப்பாறிச் செல்லலாமே. மணக்கும் சூடான ஃபில்டர் காஃபி போட்டு வைக்கிறேன்.

http://tamilamudam.blogspot.com/2008/07/blog-post.html

sury siva said...

வந்தோம்.. இதோ வந்து விட்டோம்.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://vazhvuneri.blogspot.com

ராமலக்ஷ்மி said...

இரு பாடல்கள் தந்து என்னை கெளரவித்து விட்டீர்கள். இரண்டாவதை எழுத (காக்க) வைத்ததற்க்கு மன்னியுங்கள். உங்களுக்கு நான் பதில் எழுதிக் கொண்டிருந்த சமயத்திலே அடுத்த பாடல் வந்து விட்டது ஐயா! அதற்கும் பதில் தந்திருக்கிறேன் முறுக்குகளுடன்.

ராமலக்ஷ்மி.

ராமலக்ஷ்மி said...

பிரசுரத்துக்கு அல்ல!

சற்றே தாமதமாகி விட்ட பதிலைத் தவறாக எடுத்துக் கொள்ளவில்லைதானே ஐயா? இரண்டு வரி எழுதிவிட்டீர்கள் எனில் மனதுக்கு இதமாக இருக்கும்.