இதயத்திற்கு இதமளிக்கும் இனிய ராகங்கள்.. A BILINGUAL ILLUSTRATION OF CLASSICAL MUSIC BOTH CARNATIC AND HINDUSTHANI Let us enjoy melodies
Friday, June 13, 2008
தமிழ் தியாகராஜர் ** பாபனாசம் சிவன்
WHAT A BLESSING WAITS FOR US !
Thirupathi Perumal Lord Balaji
Sri Papanasam sivan has composed this immortal song
SRINIVASA THIRU VENKATAMUDAYAN... RAAG HAMSA NANDHI
என்ன ஆச்சரியம் !!
( சிவனைப் பற்றி எழுதுவோம் என ஆரம்பித்தால்,
பெருமாள் வந்துவிட்டாரே !!
சரிதான் !! ! )
திருவேங்கடமுடையானிடம் பாபனாசம் சிவன் என்ன அப்படி வரம் கேட்கிறார் ?
Courtesy: KVNVASU
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றிய பாபனாசம் சிவன் அவர்களை தமிழ் தியாகராஜர் என்று இசை உலகம் போற்றி மகிழும். இவைகளில் பெரும்பாலும் தமிழில் இயற்றப்பட்டு, அவைகளில் ஏறத்தாழ 400 பாடல்கள் கர்னாடக சங்கீத ராகங்களில் அமையப்பெற்றவை. சுமார் 800 பாடல்கள் தமிழ் படங்களுக்காக இயற்றப்பட்டவை. இவைகளிலும் பல கர்னாடக சங்கீத மெட்டிலே அமையப்பெற்று உள்ளன்.
தனது ஆரம்ப நாட்களில் இவர் நூரானி மஹாதேவ பாகவதர் மற்றும் சம்பா
பாகவதர் அவர்களிடம் இசை பயின்றதாகத்தெரிகிறது.
1934 முதல் 1939 சென்னை கலாக்ஷேத்ராவில் ஆசிரியராகவும் பணி புரிந்துள்ளார்.
இக்கல்லூரி ருக்மணி அருன்டேலினால் துவக்கப்பட்டதென்பதை யாவரும் அறிவர்.
1935ல் தான் இவர் சினிமா படங்களுக்கு பாடல் எழுதத் துவங்கினார் என்றும் ஒரு நான்கு படங்களில் கூட நடித்திருக்கிறார் எனவும் சொல்லுகிறார்கள்.
பெருமளவில் இவரது சினிமா பாடல்கள் பக்திரசத்துடனும் சமூகச் சிந்தனையுடன் அமைந்திருந்தன.
இவரது பல பாடல்களில் ராமதாஸ் எனும் முத்திரை கவனிக்கலாம். இருப்பினும்
எல்லாப்பாடல்களிலும் முத்திரை பதிக்கவில்லை.
M.K.THYAGARAJA BHAGAVATHAR SINGS IN 'SIVAKAVI' LYRIC BY PAPANASAM SIVAN
"soppana vazhvil magilndhen.."
" நான் ஒரு விளையாட்டு பொம்மையா ஜகன் நாயகியே உமையே
உனக்கு நான் ஒரு விளையாட்டு பொம்மையா"
நவரச கானடா வில் அமைந்திருக்கும் இப்பாடல் எத்துணை பொருள்
செறிந்துள்ளது.
இந்தச் சிறுமி எவ்வளவு அழகாக பாடுகிறாள் பாருங்கள் !
அந்த அன்னை இச்சிறுமிக்கும் எல்லாம் அருளட்டும் .
NEXT IS A CLASSICAL .
Song: karpaga manOhara
RAgam: malayaMArutam (sounds similar to Valachi) janya of ChakravAgam
TAlam: khanda chApu
Composer: Papanasam Sivan
nOW A DANCE PROGRAMME
வாழிய நீடூழி புவி மீதிலே
1963ல் வந்தது இந்த படம். கருப்பு வெள்ளைதான்.
இசை அறிஞர் எஸ்.வி.வெங்கடராமன் இசை அமைத்து
பி.லீலா , ராதா ஜெயலக்ஷ்மி பாடியது.
அந்த காலத்தில் "அறிவாளி" படம் பிரசித்தம். ஓஹோன்னு ஓடியது.
சிவாஜி கணேசன், பானுமதி நடித்த அந்தப்படத்தில் " வாழிய நீடூழி புவி மீதிலே " என்று துவங்கும் நடன இசைக்கு பாடல் எழுதியவர் பாபனாசம் சிவனே.
.
என்ன நடனம் ! என்ன பாடல் ! என்ன குரல் வளம்!!
அத்தனையும் சிவாஜியின் முகத்திலும் பானுமதியின் முகத்திலும்
பிரதிபலிக்கிறதே !!
( யூ ட்யூபில் இதைப் போட்டவர் ஒரு தருமவான் !
எம்பெட்டட் disabled on request என இங்க்லீஷிலே போட்டிருக்கிறார்.
அவர் வாழ்க. ) God Bless him.
இருந்தாலும் இந்த சுட்டியில் சுட்டி சென்று மகிழ்ந்து உடனே வந்துவிடுங்கள்.
DO NOT MISS TO SEE THIS VIDEO BUT COME BACK, AS MORE TREASURE WAITS FOR U AND U ONLY.
http://www.youtube.com/watch?v=q5O1R-rPFJM
பாபனாசம் சிவன் பாடல்களை, சினிமா உலகில் எம்.கே.தியாகராஜ பாகவதர் (சிவகவி),எம்.எஸ் அவர்கள் ( சகுந்தலை, சாவித்ரி ) ( தியாகபூமி யில் டி.கே.பட்டம்மாள் அவர்களும் பாடியவை குறிப்பிடத்தக்கவை. இன்னும் ஒரு 800 பாடல்கள் அச்சு வடிவில் வரவில்லை எனவும் சொல்கிறார்கள். இவரது புதல்வி Dr.Rukmani ஒரு வலை தளத்தில் தந்திருக்கிறார். Those of you who would prefer to have texts of all songs in pdf format, kindly click below:
http://www.geocities.com/Athens/Acropolis/1428/
1890 ல் தஞ்சைக்கு அருகே இருக்கும் போலகம் எனும் சிறு ஊரில் பிறந்த அவரை அவருடன் வாழ்ந்தவர் பலரும் ராமையா என்றே கூப்பிடுகிறார்களாம். பாபனாசம் என்ற ஊரில் ( தஞ்சைக்கும் கும்பகோணத்திற்கும் இடையில் உள்ளது ) வெகு காலம் இருந்த இவர் கேரளாவில் திருவனந்தபுரம் சென்று 1910 வரை அங்கே பல மலையாள சம்ஸ்க்ருத பாடல்களையும் இயற்றியதுடன் மொழி பெயர்த்தும் இருக்கிறார் என வரலாறு சொல்கிறது. இந்த மேதையை சென்னை ம்யூசிக் அகடெமி வெகு காலம் கழித்தே அங்கீகாரம் செய்தது என்பது தமிழ் சங்கீத உலகின் நீங்காத வருத்தம். பாபனாசம் சிவன் அவர்களின் பாடல்களை ஒரு சரத்தில் கோர்த்து கீழே தந்திருக்கிறோம். அருமையான, எளிய, இனிய பாடல்களை, அன்றைய, இன்றைய பிரபல பாடகர்களின் வளமிகு குரலில் கேட்டு மகிழுங்கள்.
http://www.musicindiaonline.com/p/d/report/.4m2qlMxymZ3MmUvqImKi-yys6HQAEZy/?js11=true&cdp=true&ry=true&rv=11.0.0.431&wmy=true&wmv=11%2C0%2C5721%2C5145
http://www.musicindiaonline.com/p/x/.4m2qlMxymZ3MmUvqImKi-yys6HQAEZy/?done_detect
Log On here to listen to how Papanasam Sivan inspired Professors of Princeton University http://www.sawf.org/newedit/edit10152001/musicarts1.asp
இன்றைய தமிழ் வலை உலகிலே பாபனாசம் சிவன் அவர்களுக்கு
ஓர் இசை வாரிசு என்று எதிர்காலத்தில் உருவாகக்கூடிய சிறப்பு மிக்க கவிஞர்
பலர் உளர். நொடிப்பொழுதில் கவிதை எழுதும் உற்சாகம், திறன் கொண்ட
வல்லுனர்கள் இருப்பது தெரிகிறது.
இவர்கள் எல்லோரும் வாக்தேவியின் அருளைப் பெற்றிட
பாபனாசம் சிவன் இயற்றிய பாடலையே ஒன்று
எல்லோரும் சேர்ந்து பாடிடுவோம்
A sanskrit devotional song on Goddess Saraswathi
TRICHUR RAMACHANDRAN SINGS. (AUDIO COURTESY; WEBSITE QUOTED ABOVE )
HAVING SAID ALL, WE WAIT FOR SOMEONE AMIDST THE WEB WORLD (WHO PENS HER POEMS IN FRACTIONS OF A SECOND ) TO EMERGE
ENTHUSIASTICALLY AS A WORTY SUCCESSOR TO TAMIL THYAGARAJA.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நல்ல தொகுப்பு பாபநாசம் சிவன் அவர்களைப் பற்றியது. தமிழ்ப் பாடல்களை பல்வேறு பிரபல கீர்த்தனைகளுக்கு இணையான அளவில் இயற்றியவர் என்கிற பெருமை அவரைச் சாரும். Its not just the quantity but also the Quality and also the simple approach.
Thanks for the post!
ஜீவா (Jeeva Venkataraman) said
//Its not just the quantity but also the Quality and also the simple approach//
i AM INDEED VERY HAPPY TO SEE U HERE,EVEN AS I AM TRYING TO GIVE SOME FINAL TOUCHES. IT IS NOT ONLY THE SIMPLE WORDS HE HANDLED WHILE COMPOSING A SONG, BUT THE WAY HE LED HIS LIFE AMAZES ONE. IT WAS ONE OF SIMPLICITY. DID YOU READ WHAT THE PROFESSORS OF PRINCETON UNIVERSITY HAVE TO SAY ABOUT HIM !
SUBBU RATHINAM.
THANJAI.
Post a Comment