Pages

Tuesday, June 24, 2008

ஸ்ருதி மாதா லயம் பிதா

பல இசைக்கச்சேரிகளில் தனி ஆவர்த்தனம் என்று பக்க வாத்தியக்காரர்களுக்கு ஒரு 20 முதல் 30 நிமிடங்கள் ஒதுக்குகிறார்கள். இந்த தனி ஆவர்த்தனம் என்பதே எதற்கு என்று பல சர்ச்சைகள் பல காலமாகவே இருந்து வருகின்றன. காதில் படும் காரணங்கள் இவையே:

1. பாடகருக்கு கொஞ்சம் ஓய்வு தேவை.
2. கேட்பவர்களுக்கு கொஞ்சம் ஓய்வு தேவை.
3. இடையே கொஞ்சம் நேரம் கிடைத்தால்தான் கான்டீனுக்குச் சென்று போண்டா, நெய் ரோஸ்ட்
சாப்பிட்டு வரமுடியும்.
4. பக்க வாத்யக்காரர்கள் தாங்களும் இருக்கிறோம், எங்கள் வித்வத்தை எப்பொழுது தான் காண்பிப்பதுஎன்று சொல்வதற்கு.
5. இசைக் கச்சேரியின் ஒரு முக்கிய (ஏன் ! பிரதான) அங்கம் தனி ஆவர்த்தனம் .

கோவில்களில் ஜாம பூஜை துவங்கும்போது கூட முதலில் நாதஸ்வரத்திற்குப் பின் மத்தளம்
வாசிக்கிறார்கள். ஒரு கச்சேரியின் துவக்கத்திலேயே மிருதங்க வித்துவான் ச்ருதிப்பெட்டியுடன்
கூட தானும் தும்,தும், என்று ஓசை எழுப்புகிறார். அந்த ஒலி ச்ருதியுடன் இணைவதை பாடகர்
கவனித்தபின் தான் " வாதாபி கணபதி ' என்று ஆரம்பிக்கிறார்.

இவையெல்லாம் என்ன ? ஏன்? என கேள்வி வருகிறது ? ஒரு தவில் இல்லாமல் நாதஸ்வரம் வாசிக்கமுடியாதா? ஒரு மிருதங்கம், கடம், கஞ்சிரா, கொன்னக்கோல் இல்லாமல், ஒரு பாடகர் பாடமுடியாதா ? இசை சாத்திரம் இன்ன சொல்கிறது ?

"ஸொகஸுகா ம்ருதங்க தாளமு.." என ஒரு தியாகராஜரின் க்ருதியில் கூட ம்ருதங்கத்திற்கான
முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. ஒரு இசைக்கச்சேரி என்றால் ஒரு கோபுரம் கட்டுவது போல.
அதற்கு அஸ்திவாரம் தாளம். இந்த தாள தளத்தின் மேல் தான் நாதம் கோபுரமாக உருவாகிறது.
தாளக்கட்டின் அடிவாரத்தின் மேல் தான் ஸ்ருதி இணைந்து நாதமாக அமையும்போது தான் அதை
ஒரு ராகத்தின் கட்டுமான பரிமாணங்களுக்குள் அமைக்க இயலும். ஏழு ஸ்வரங்களூக்குள் எத்தனை
ராகம் ? ராகத்தை ஆலாபனை செய்யலாம். ஆயினும் ஒரு பாடலின் மேல் அந்த ஸ்வரங்கள் அழகென
பரிணமிக்க வேண்டுமெனில் தாளம், லயம் பிரதானம். முக்கியம். வேறு விதமாகச் சொல்லப்போனால்,
ஒரு ஸ்வரத்தை இன்னொரு ஸ்வரத்தோடு இயைந்து இணைப்பதற்கு ஒரு காலப்பிரமாணத்தின் (லயத்தின்) அடிப்படையிலேதான் அமைகிறது. வர்ணம் சொல்லிக்கொடுக்கும்போதே தாளக்கட்டு சரியாக வருகிறதா , அந்த தாளக்கட்டுக்குத் தகுந்தபடிதான் ஸ்வரங்களோ அல்லது ஸாஹித்யமோ செல்கிறதா என ஆசிரியர்
கூர்ந்து கவனிக்கிறார்.

இந்தக் கால ப்பிரமாணம் சற்று நகர்ந்து போனாலும் ஸ்வரங்கள் சரிவர கோர்க்காது அபஸ்வரம்
ஒலிக்கிறது. ஆகவே ஸ்ருதி தாய் எனின் லயம் தந்தை.

ஒவ்வொரு க்ருதியும் ஒரு ராகத்தின் அடிப்படையில் அமையும். அந்தக் க்ருதி ஒரு குறிப்பிட்ட
காலப்பிரமாணத்தில் தான் அதாவது ஒரு தாளத்தில் தான் இருக்க இயலும். ஆதி, திருபுடை, கண்ட சாபு
என்றவாறு பல லய அமைப்புகள் உள்ளன.

தனி ஆவர்த்தனத்தில் ஏதாவது ஒரு தாளத்தின் விஸ்தாரத்தை விளக்கமாகக் கூறவேண்டும். இதற்கு லய விஸ்தாரம் என்று பெயர். இது சங்கீத வித்வான்களின் கடமை எனவே கருதப்படுகிறது. ராகத்தை விஸ்தரித்து அதன் பரிணாமங்களை ஒரு ஆலாபனையில் தருவது போல், ஒரு லயத்தின் பரிணாமத்தினையும் தர வேண்டும் ஆக, பக்க வாத்யம் என்பது இசை நிகழ்ச்சியின் ஒரு முக்கிய அங்கம். அவர்களின் தனி ஆவர்த்தனம் இல்லாத கச்சேரிகள் முழுமையாக ஆகாது.

இன்று நாம், கடம், மிருதங்கம், கஞ்சிரா, மோர்சிங், தபலா போன்ற பக்கவாத்யங்களின் தனி ஆவர்த்தனத்தைக்காண்போம் அல்லது கேட்போம்.
முதலில் பிரபல கட வித்வான் திரு. சுரேஷ் அவர்களின் தனி ஆவர்த்தனம் ( திரு சுரேஷ் எனது அத்தையின் பேரன். என்னுடன் பல காலம் கணினி மென்பொருளாளராக இருந்தவர். ஸி ப்ரொக்ராமில் அன்றைய காலத்தில் நிபுணராக இருந்தார். நான் சொல்வது 1994 ல். பின் இசையின் பால் குறிப்பாக லயத்தில் அவரது ஈர்ப்பு அதிகம் இருந்ததால், தனது பதவியை துறந்து கட வித்வானாக சென்று, இன்று உலகத்தில் எல்லா நாடுகளிலும் தன் பெயர் பிரசித்தமாகும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார்.
அவரது கச்சேரி முதலில் .

ghatam suresh





அடுத்து உமையாள்புரம் சிவராமன் அவர்கள். வாசிப்பது கண்ட சாபு தாளம்.
Umayalpuram sivaraman. kanda chapu thalam

http://www.musicindiaonline.com/p/x/NUf0IYPgnd.As1NMvHdW/?done_detect


பாலக்காடு மணியின் நாதம் இன்பத்தின் எல்லைக்கோடு எனலாம். அவர் மிருதங்கம் கவி பாடும்
என்றால் மிகையாகாது. அவரது தனி ஆவர்த்தனம் இங்கே.
Excerpted percussion solo (Thani Avarthanam) from a rare television broadcast of Alathur Shri Srinivasa Iyer (Vocal), Lalgudi Shri G. Jayaraman (Violin) and percussion maestro Palghat Shri T. S. Mani Iyer (Mridangam).



இங்கே உமையாள்புரம் வினாயக்ராமுடன் சேர்ந்து. அப்பாடி ! அபாரம் !!
umayalpuram K.Sivaraman and Vikku vinaykram



கொன்னக்கோல் கேட்டிருக்கிறீகளா ! ரசித்திருக்கிறீகளா ! தாளக்கட்டுகளை அப்படியே வாத்யத்தில் வாசிப்பதுபோல வாயினாலே சொல்வது. வெகு கஷ்டமான கலை. இந்தக் கலையில் தேர்ந்தவர்கள்
இப்போதெல்லாம் அதிகம் பேர் இல்லை.
konnakol



வினாயக் ராம் தனி ஆவர்த்தனம் கடத்தில் இங்கே.
ghatam vinayakram



அடுத்து, கணேஷ் ராம் அவர்கள் கஞ்சிரா. இதை வெஸ்டர்ன் இசை அறிஞர்கள் ஹார்மொனிய ட்ரம்
என்கிறார்கள்.
ganeshkumar kanjira



இத்தனையும் கேட்டுவிட்டு, தபலாவைக்கேட்காமல் அதுவும் ஜாகிர் ஹுசேன் அவர்கள் தனி ஆவர்த்தனத்தினை
க்கேட்காமல் இருக்கமுடியுமா ?
tabla zakir hussain


இன்னொன்று ஜாகிர் ஹுசேனின் கலைதனை புகழ்ந்து சொல்லும் இசை வல்லுனர்கள்.
zakir hussain


எல்லாக் கச்சேரியும் மங்களத்தில் தான் முடியும். முடியணும். இங்கே டாக்டர் பாலமுரளி தானே இயற்றிய‌
அற்புதமான மங்கள இசைதனைப் பாடுகிறார்.
mangalam by Dr.Balamurali krishna



என்ன கேட்டு மகிழ்ந்தாச்சா ?

Enjoy the Thani Avarthanam to your Heart’s content.
Good Luck.

1 comment:

jeevagv said...

சூப்பர் தொகுப்பு!
முதலில் தொடங்கிய விளக்க உரை அருமை.
இப்படி எல்லாப் பதிவுகளிலும் உரை தந்தால் எங்களுக்குப் பயனாக இருக்கும்!
(அதிகம் கேக்கிறேனோ?!)