Warm up for this Feature.
A humming by the Super Voice in the field of Film Music especially Tamil/Telugu.
பாம்பே ஜெயஸ்ரீ பூபாளம் பாடுவதை உன்னிப்பா கேளுங்கள்.
இப்பொழுது எம்.எஸ்.அம்மா அவர்கள் பெளளிலே பாடுவதைக் கேளுங்கள்.
என்னவோ இந்த மூணுலேயும் ஏதோ ஒண்ணு காமனா இருக்கு.
அதே சமயத்திலே வித்தியாசமாவும் இருக்கிறதா ?
என்ன அது ?
இது நடந்து ஒரு 30 வருடம் இருக்கும்.
"அட போங்கப்பா ! உங்க சாஸ்த்ரீய சங்கீதமும் நீங்களும் !
ரொம்பவே மெனக்கட்டு கத்துக்கினு வந்து பாடலாம்கிற ஸ்டேஜிலே
வந்தபோதுகூட, அங்கெங்க ரண்டு பெருசுக " என்ன அங்க ஒரு
அபஸ்வரம் இருக்கே ! இது சுத்த மத்யமம் இல்லை, பிரதி மத்யமம்னா
அது அந்த ராகத்திலே கிடையாதேன்னு எனக்குப்புரியாததை எல்லாம்
பேசிடறாங்க.. " என்றான் என் நண்பன். அவன் ஒரு அனுபவி.
எந்த சங்கீதத்தையும் ரசிக்கத் தெரிந்தவன். அப்படித்தான் கர்னாடக சங்கீதமும்
கற்கத் துவங்கினான்.
" நீ அப்படி சொல்லக்கூடாது. கர்னாடிக் ம்யூசிக் ஒரு சயின்ஸ். அதுக்குன்னு
ஒரு டிஸிப்ளின் இருக்கு . அதை மதிச்சு நடந்தாத்தான் அது நமக்குக் கட்டுப்படும்."
என்றேன் நான்.
" அது சரி, எனக்கும் தெரியும் இதெல்லாம் வெத்து வேதாந்தம். ப்ராக்டிகலா பேசு.
" சரி. சொல்லு"
" இந்த பூபாளம்னு ஒண்ணு இருக்கே. மார்கழி மாதம் காலைலே. "
" ஆமாம். அது 8 வது ஹனுமத் தோடிலே ஜன்யம்.
அதனோட ஆரோகணம் அவரோகணம் பாரு.
A: S R1 G2 P D1 S
Av: S D1 P G2 ற்1 ஸ் "
" அது எனக்கு நன்றாகவே தெரியும். இப்ப பாரு. இந்த பூபாளம் மாதிரி தான்
பெளளி என்கிறதும் இருக்கு.."
" போளியா ? "
" பெளளி .. எம்.எஸ். அம்மா கூட ஸ்ரீமன் நாராயண பாடுவாங்களே அது.."
" ஆமாம். அதற்கென்ன ? "
" அதுவும் இந்த பூபாளமும் ஒரே மாதிரி தானே இருக்கு ? "
" ஸ்வர வித்தியாசம் இருக்கே ?"
" அது எனக்கும் தெரியும். அது 15வது மாயா மாளவ கெளளவில் ஜன்யம்.
ஆரோகணம், அவரோகணம்.
A: S R1 G3 P D1 S
Av: S N3 D1 P G3 ற்1 ஸ் "
இப்ப இந்த பெளளிலே அவரோகணத்தில் மட்டும்தான் ஒரு நிஷாதம் கூட இருக்கு.
மத்தபடி, இந்த இரண்டுமே மேலே போகும்போது ஒன்றாகத்தான் இருக்கு. கீழே அவரோகணத்திலே
ஒரு நிஷாதம் இருக்கு. "
" ஆமாம். அதனாலே தானே வெவ்வேறே ராகம்னு சொல்றோம் "
" அது சரி. ஆனால், கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பது எப்படி வெவ்வேறா ஜன்யம் இருக்கு ? "
எனக்குக் கொஞ்சம் பதில் சொல்லத்திணறல் இருந்தது. பார்க்கப்போனால், பூபாளம், பெளளி
மட்டுமல்ல, மலயமாருதம் கூட இந்த மாதிரி தான். " ஏன் அப்படி வெவ்வேற ஜன்யம் ?
ஒரு வேளை great men think alike என்பார்களே. அது போல்
வெவ்வேற காலத்து வெவ்வேற பேர் இலக்கணம் வகுத்து இருப்பார்கள். " என்று நினைத்தேன்.
என்னுடைய ஆஸ்தான எக்ஸ்பெர்ட்டைக் கன்ஸல்ட் செய்தேன்.
ஒரு 60 நிமிஷத்திற்கு கன்டினுவஸ் லக்சர் செய்தாள்.
பல விஷயங்கள் புரியமாதிரி இருந்ததே தவிர புரியவில்லை.
சில விஷயங்கல் புரிந்தன ஆனால் திருப்பி சொல்ல முடியவில்லை
ஏன் எனில் எனக்கு குரல் வளமில்லை.
ஒன்று மட்டும் அவள் தீர்க்கமாகச் சொன்னாள்.
அடேய் சூரி ! உனக்குத் தாத்தா வைத்த பேரு சுப்பு ரத்தினம்.
அப்பா வைத்த பேரு சூரி.
ஆளு நீ ஒண்ணு தானே.
ஆனா, உன்னை சுப்பு ரத்தினம்னு கூப்பிடற இடத்துலே பஞ்ச கச்சம் மேல் அங்கவஸ்திரம் போட்டு இருக்கயா ?
" ஆமா "
சூரின்னு இல்லை சூரிய நாராயணன்னு கூப்பிடற இடத்துலே பஞ்ச கச்சம் கட்டிண்டு
வீபூதியை பட்டை பட்டையா போட்டுண்டு இருக்கயா ?
" ஆமா, அதுவும் இல்லை. "
"அதே போலத்தான் இந்த கர்னாடக சங்கீதமும்.
எல்லாத்துக்குமே BASE ஒன்னுதான். அந்த 72 மேளம் தான்.
அதுலேந்து தான் எல்லா ராகங்களும்.
அப்பப்ப, வித்வான்கள் தங்கள் கற்பனா சக்தியை உபயோகித்து ஒரு ஸ்வரத்தை
அல்லது ஒரு ஸ்வரத்தின் dimension கொஞ்சம் மாற்றுகிறார்கள்.
ஒரு ராகத்திலே இருக்கற சுத்த காந்தாரத்தை அந்தர காந்தாரமா மாத்தினா
ராகமே மாறிப்போயிடறதே.. "
"சரியா புரியல "
" எப்படி புரியாம போகும் ? நான் பண்ற வெத்தக்குழம்பும் உன்னோட
ஆத்துக்காரி பண்ற வெத்தக்குழம்புலேயும் அதே புளி, சாம்பார் பொடி, உப்பு,
வெந்தயம், எக்ஸ்ட்ரா இருக்கு . ஆனா உப்பு ஒரு துளி அதிகமாய் போயிடுச்சுன்னா
ருசி வேற ஆயிடுறதா.. அது போலத்தான் இதுவும். !"
இப்பொழுது எனக்குப் புரிந்தது.
malayamarutham
16 cakravAkam janya
Aa: S R1 G3 P D2 N2 S
Av: S N2 D2 P G3 R1
Now demonstration .
First in Raag Bhoopalam.
1.Listen to a thillana by Balamurali, a recital
Swathi thirunal
2.sadachaleshwaram nithyashree bhoopalam adhi
muthuswami Dikshitar krithi
http://www.musicindiaonline.com/p/x/3JC20lVx2krMntwESIJjWWRM/
now in raag bowLi
bowli lakshmi rangarajan karuna nidhiye thaye mishra chapu
http://www.musicindiaonline.com/p/x/gqC2-aMx7rUm_twESIJjWWRM/
http://www.musicindiaonline.com/p/x/UUmgNPZ-ct.As1NMvHdW/
Happy Listening !
2 comments:
கேட்டும், பார்த்தும், படித்தும் ரசித்தேன் ஐயா.
உரையாடுவதுபோல் அமைத்திருப்பது அருமை!
great blog. like the way you explain with videos/auidos and text. i like your links. but it would have been better if your posts were in english. that way it would be accessible for more people, like me.
hope you do so in the future posts.
-antiraoranter
Post a Comment