Pages

Thursday, April 24, 2008

Nattakurinji

Nattakurinji
This belongs to:
28 harikAmbhOji janya
Aaroganam and Avaroganam are as follows:

Aa: S R2 G3 M1 N2 D2 N2 P D2 N2 S
Av: S N2 D2 M1 G3 M1 P G3 R2 S

இந்த ராகத்தில் அமைந்த ஒரு பாடல் ரஞ்சனி காயத்ரி சேர்ந்து பாடுகிறார்கள். நந்தனார் சரித்திரத்தில் அமைந்த ஒரு நிகழ்ச்சி. கோபால கிருஷ்ண பாரதி இயற்றிய பாடல்.அனேகமாக கர்னாடக சங்கீதத்தில் விருப்பமுள்ள அனைவருமே " பாவயாமி ரகுராமம் " என்னும் ராகமாலிகையைக் கேட்காமல் இருந்திருக்க மாட்டார்கள். டாக்டர் எம்.எஸ். அவர்கள் பாடிய இசைஒலித்தட்டு
ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறது என்றால் அது மிகையாகாது. அப்படிப்பட்ட ஒரு கீர்த்தனையின் முதல்
சரணம் நாட்டக் குரிஞ்சியில் அமைந்துள்ளது.

Songs:
bhAvaiyAmi (caraNam 1)

dinakaraanvayatilakam | divyagaadhi sudasavanaa ||
vanaracitasubaahumukha- | vadamahalyaa paavanam ||
anaghameeSaSaapapangam | janakasudaapraaNeSam ||
ghanakupithabhruguraama | garvaharamithasaakEtam ||

இந்த ராகத்தில் இருக்கும் கீர்த்தனைகளை ஒரு பட்டியல் கொடுக்கிறது. கர்னாடிக்.காம் எனும்
வலை தளம்.
www.karnatik.com
dharma samvarttani tAyE - PS
EDanunnADO - BR
ekkAlattilum
eppOdu varuvAyO - SNB
kuvalayadaLa - T
manasu vishhaya - T
nAkabhaya varamosagi - GNB
nityaklinnE - HB
O dhavanEshwara - T
pAlvaDiyum mugam - OV
pArvatikumAram - D
paripAhi dayAkara - TSV
tillAnA (dhIm dhIm tanana) - RS

1942ல் தமிழ் நாட்டில் சுமார் 2 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து ஓடிய படம் சிவகவி. இதில் எம்.கே.தியாகராஜ பாகவதர் தமது குரல் வளத்தினாலேயே சங்கீத ரசிகர்கள் மனதில் குடி கொண்டவர். "கவலையைத் தீர்ப்பது
நாட்டியக் கலையே " என்னும் பாடல் இன்னமும் அதாவது 55 வருடங்களுக்குப்பின்னும் சங்கீதக் கச்சேரிகளில்
பாடப்பெறுகிறது. நாட்டக்குறிஞ்சி ராகத்திற்கே இது நல்ல ஒரு உதாரணம் ஏன் எனின் இந்த ராகத்தின் மற்ற பரிமாணங்களும் வெகு நேர்த்தியாகக் கையாளப்படுவதே.


Other scales: S R2 G3 M1 D2 N2 S - S N2 D2 M1 G3 S, S R2 G3 M1 N2 D2 N2 P D2 N2 S - S N2 D2 M1 G3 M1 P M1 க்3 ற்ற்2 ஸ்


பாடலை இயற்றியவர்: பாபநாசம் சிவன் .
இசை: G ராமனாதன்
என்ன அழகான சாகித்யம் பாருங்கள்:

கவலையைத் தீர்ப்பது நாட்டியக்கலையே
கணிகையர் கண்களே மதன்விடும் வலையே
நவரஸங்களிலும் சிருங்காரமே தலைய
நளின நடையழகிற் கீடெங்கும் இல்லையே

புஜமிரண்டு மூங்கில் தளர்நடை யஞ்சி
புருவம் இடையுடலும் வளையுமே கெஞ்சி
ரஸிகத் தன்மையில் கைதேர்ந்தவன் வஞ்சி
ராகத்தில் சிறந்தது நாடக்குறிஞ்சி

இந்த ராகத்தின் முழு பிரதிபலிப்பை சமீபத்தில் வந்த சினிமா பாடல் " கண்ணாமூச்சி ஏனடா?" என்ற பாடலில் காண முடிகிறது. கண்டுகொண்டேன் என்னும் திரைப்படத்தில் வந்த இப்பாடல் பெரிய ஹிட் ஆனதில்
ஐயம் ஏதும் இல்லை.
ஆன்மீக வலைத்தளம்
www.kaumaram.com
காணப்பெறும் கேட்கப்பெறும் ஒரு திருப்புகழ் இந்த ராகத்தில் அமைந்துள்ளது.
அற்புதமாக உள்ளது. Please click below.
hiraivanja iruvinaigaL narai anga malam azhiya
sivagangai thanil muzhugi ...... viLaiyAdi

sivam vandhu kudhikoL aga vadiundran vadivamena
thigazh aNdar munivargaNam ...... ayan mAlum

aran maindhanena kaLiRu mukan embiyena magizha
adiyenkaN aLiparava ...... mayilERi

ayil koNdu thiru natanam ena thandhaiyudan maruvi
arumantha poruLaiyini ...... aruLvAyE

pariyenba narigaL thamai natanangkod oruvazhudhi
parithunja varu madhurai ...... NadarAjan

pazhiyanji enadharugil uRai puNdarika vadiva
pavaLansol umai kozhunan ...... aruL bAlA

iruL vanjagiri avuNarudan engaL iruvinaiyum
eriyuNdu podiya ayil ...... viduvOnE

enadhanbil uRaisayila magizh vanji kuRamagaLo
deNu panjaNaiyin maruvu ...... perumALE.


1 comment:

ஜீவா (Jeeva Venkataraman) said...

வழி மறைத்திருக்குதே மலை போலே...ஒரு

மாடு படுத்திருக்குதே...
என்ன அருமையான பாடல், அதற்கேற்றாற்போல் அருமையான rendering...!
Hats off to Ranjani&Gayathri.

மலைபோலே...என்று சொல்லும் இடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மலைபோல grow ஆகுவது அருமை! அப்படியே சந்நிதியின் வெளியே நின்று கொண்டு, (குணா படத்தில் பார்த்த விழி பார்த்தபடி...பாடலில் வரிசையில் நின்றுகொண்டு கமல் ஆடிக்கொண்டே நகர்வாரே அதுபோல...) முன்னால் இருக்கும் கூட்டம் கலைந்து எப்போது எம்பெருமான் தரிசனம் கிடைக்குமோ என்ற ஏங்குவது போல இருக்குது.