Pages

Wednesday, May 28, 2008

ஆரபி ராகத்தைத் தெரியாவதரே இருக்காத

ஆரபி ராகத்தைத் தெரியாவதரே இருக்காது எனலாம். கிட்டத்தட்ட ஒரு 40 அல்லது 45 ஆண்டுகட்கு முன்னால் வந்த மிஸ்ஸியம்மா படத்தில் " பிருந்தாவனமும் நந்தகுமாரனும் " பாட்டு இன்னமும் ஒலித்துக்கொண்டே தானே இருக்கிறது.




தியாகராஜ ஆராதனைத் திருவிழாவில் சாதிஞ்சனே பாடும்போது பாடகர்கள் மட்டுமல்ல, அந்தத் திருவிழாவில் பங்கெடுக்கும் அத்தனை பேரும் ஒருமித்து அழகாக பாடுவதைக் கவனித்திருக்கிறேன். இந்த ராகத்தில் க்ருதிகள் மும்மூர்த்திகளும் புனைந்துள்ளார்கள்.

29 வது தீர சங்கராபரணம் ஜன்யம்
இதன் ஆரோகண அவரோகணங்கள்:
A: S R2 M1 P D2 S
Av: S N3 D2 P M1 G3 R2 S


ஸ்ரீரங்கனாத குரு எனத் துவங்கும் இந்தப் பாடலை முதலில் கேட்டு மகிழுங்கள்.
பாடியவர்கள். ப்ரியா சகோதரிகள். ஒரு விருத்தத்துடன் துவங்குகிறது இது.
விருத்தம் எனது நண்பர் ஜீவாவுக்கு விருப்பம்.


http://www.musicindiaonline.com/p/x/dUO2AlpoWd.As1NMvHdW/?done_detect
மஹாராஜபுரம் சந்தானம் பாடிய துர்கா லக்ஷ்மி சரஸ்வதி என்னும் க்ருதி இது. ஒரு தடவை கேட்டுவிட்டால் திரும்பத்திரும்பக் கேட்கத்தூண்டும் பாடல் இது. அது சந்தானம் சாரின் குரல் வளமா ஆரபியின் அற்புத பிரவாகமா அல்லது இப்பாடலின் சொற்களினூடே அமைந்துள்ள நயமும் நீரோட்டமுமா ! நீங்கள் தான் சொல்லவேண்டும்.
maharajapuram santhanam
durga lakshmi saraswathi Arabhi.

http://www.musicindiaonline.com/s?q=arabhi&i=1&f=ragam&s=checkbox&o=0
இந்த சுட்டியில் அமைந்துள்ள எல்லாமே கேட்கக்கேட்க, குற்றால அருவியிலே நமை மறந்து நிற்பது போலத்தோன்றும். Please click the songs .

1. உன்னிக்ருஷணன் பாடும் கண்ணன் திருவடி
2. எம்.எல்.வி அவர்கள் பாடும் ஒரு தாலாட்டு... காடெல்லாம் தேடி.
3. ஒரு விழி தேடி என ராக ஆலாபனையுடன துவங்கும் சஞ்சய் சுப்பிரமணியம் அவர்கள்.

ஒடிஸி நாட்டியத்தில் இந்த ஆரபி செய்யும் அமக்களத்தையும் கண்டு களியுங்கள்.



Ms.Natalie Savelyeva, a wonderful dancer from Russia having learnt Bharatnatya from Kalakshetra Performs a wonderful Jathiswaram set to Raag Arabhi . To know more about this Dancer log on to:

http://nasa2000.livejournal.com/

She writes in Tamil and in Russian languages and a lot of friends from Chennai.



Any well wishers knowing a thillana exclusively in Arabhi ?

1 comment:

jeevagv said...

அருமையான தொகுப்பு ஐயா.
திருப்பணாழ்வாரின் "கொண்டல் வண்ணனை..." விருத்தமும், தொடர்ந்து வரும் 'ஸ்ரீரங்கநாதன் குருசேவை காண உயர்ஞானம் வந்து சேரும்..' பாடலும், பக்திப் பரவசத்திற்கு இட்டுச் செல்கிறது.