Pages

Saturday, April 12, 2008

ராகமாலிகை

வெகு நாட்களாக, ஏன் ? மாதங்களாக ராகமாலிகை பற்றி எழுதவேண்டும் என
நினைத்துக்கொண்டிருந்தேன். ஜீவா அவர்களின் 'என் வாசகம்" பதிவு ஒன்றின் மூலம் கடலூர் சுப்பிரமணியத்தின் பாடல்கள் கிடைக்கப்பெற்றேன்.

அவர் ஒரு ஜீனியஸ் என்றே சொல்லவேண்டும். அவரது பாடல்கள் பிரபல பாடகிகள் எம்.எல்.வி. மற்றும் டி.கே. பட்டம்மாள் அவர்களால் பாடப்பெற்றவை. சமீபத்தில் திருமதி நித்யஸ்ரீ அவர்கள் ' ராகத்தில் சிறந்தது கல்யாணியா..காம்போதியா " எனும் ராகமாலிகை தனை மிகவும் அற்புதமாகப் பாடியிருப்பதைக் கேட்டேன். இதில் கிட்டத்தட்ட 40 ராகங்களை இணைத்திருக்கிறார்கள்.

ராகமாலிகைக்கு என்று இலக்கணம் ஒன்று உண்டா ? அல்லது அவரவர் கற்பனை, திறன், ராக அறிவு இவற்றை மற்றுமே பொருத்துள்ளதா என பல நேரங்களில் ஆராய்ந்திருக்கிறேன். எந்த ராகத்தை வேண்டுமானாலும் இன்னொரு ராகத்தோடு சேர்க்கலாமா அல்லது இதற்கெனத் தனியாக ஏதேனும் விதிகள் இருக்கின்றனவா எனப்பார்த்தேன்.

ராகமாலிகா குறித்தும் ராகமாலிகையில் பாடப்பட்ட வெகுவாக விரும்பிக்கேட்கப்படும் பாடல்கள் குறித்து இங்கே சொல்லப்படுகிறது.திரு. சஞ்சை சுப்பிரமணியன் ஒரு விருத்தத்துடன் துவங்குவோம்.
sanjay subramanian ragamalikai
நான் பிறந்த வருடம் 1942. உலகப்போர் நடந்து கொண்டிருந்தது. தமிழ்த்திரை வானில் எம்.கே.தியாகராஜ பாகவதர் கொடி கட்டிப் பறந்த காலம். அந்த காலத்தில்
கதா நாயகர் ஹீரோவுக்கு பாடவும் தெரிந்திருக்கவேண்டும். எம்.கே.டி. தம் குரல்
வளத்தினால் அந்த காலத்து ரசிகர்களை மயக்கினார் என்றால் மிகையாகாது.
இதோ ! சிவ கவி என்னும் படத்தில் ஒரு காதல் காட்சி. ( அந்த காலத்து காதல்
காட்சி இது ! )
ராக மாலிகைக்கு தமிழ்த்திரையில் முதல் உதாரணம்.

Beautiful song..ragam...from Sivakavi (1942)..ft Bhagavatar and S Jeyaletchum
பிரியா சகோதரிகள் ராகமாலிகையில் பாடுவது இனிமையிலும் இனிமை. அய்யே மெத்த கடினம் என்று புன்னாக வராளியில் துவங்கும் பாடல் இது. கேட்டு தூங்கிப் போய்விடாதீர்கள்.

ayee metha .. priya sisters
அடுத்து அருணா சாயிராம் ஒரு அழகான விருததம் பாடுகிறார்கள். பாடலில் ஷண்முகப்பிரியா, சஹானா, ஹம்சாநந்தி மற்றும் சிவ ரஞ்சனி ராகங்கள் சங்கமம்.

aruna sairam .. virutham
RAgams: shaNmukhapriya, sahAnA, hamsAnandi, shivaranjaniஒரு மாறுதலுக்காக, ஸ்வாமி ஹரிதாஸ் கிரி அவர்களின் பஜன் தருகிறேன். இதுவும் ராகமாலிகையில் தோடி, பிலஹரி சேர்ந்துள்ளது. இதில் பக்தி பாவம் பிரதானம்.

Swami Haridass Giri thodi bilahari


மறைந்த மாமேதை டாக்டர் எம்.எஸ்.சுப்பலக்ஷ்மி அவர்கள் ஐ. நா. சபையில் பாடியது. மைத்ரீம் பஜத. எல்லா தேசங்கள், மக்களிடையே நல்லுரவு அமையவேண்டும் என்பதை பல ராகங்கள் எப்படி இணைகின்றனவோ அதுபோல இருக்கவேண்டும் அந்த நட்பு என்பதை சொல்லாமல் சொல்லி விளங்க வைக்கிறார்கள்.
Dr.M.S. maithrim bhajatha


Now Listen to Smt.M.L.V singing in Raghamalika
Sri Viswanatham bhajeham
http://www.musicindiaonline.com/p/x/zqb2rgka4t.As1NMvHdW/?done_detect

raghathil sirandhathu kalyaniya kambodiya..
Smt.Nithyashree almost keeps us spellbound by articulating a ragha malika with almost 40 to 45 different raghas. A master piece indeed !
Composed by Sri Kadalur Subramanian.
http://www.musicindiaonline.com/p/x/xJm251BVPd.As1NMvHdW/

2 comments:

ஜீவா (Jeeva Venkataraman) said...

தொகுப்பு அருமையாக இருந்தது. பொறுமையாக கேட்க வேண்டும்.

இராகமாலிகைக்கு இலக்கணம் உண்டா? என்பது பற்றி expert opinion அருமை. தாளமாலிகையையும் சேர்த்திருக்கிறீர்கள்!

ஜீவி ஐயாவின் இந்தப் பதிவுக்கும் வந்து தங்கள் கருத்தைச் சொல்லவும்!

ஜீவா (Jeeva Venkataraman) said...

சிமுலேஷன் சாரின் "ஹேமவதி-தர்மவதி-நீதிமதி"
பதிவுக்கும் அழைப்பு விடுக்கிறேன் - தங்கள் அனுக்கிரஹத்திற்காக!