Pages

Monday, October 17, 2011

NEELAMBARI





varam tanda sAmikku (sippikkul mutu) singer suseela Music by Ilayaraja

வரம் தந்த சாமிக்கு ... சுசீலா பாட இளைய ராஜ இசை அமைக்க சிப்பிக்குள் முத்து என்னும் படம் மறக்க முடியுமா ?



pallavan pallavi (kalanggarai viLakkam)

கலங்கரை விளக்கம் படத்தில் எம்.ஜி. ஆர் நடித்தது.  பல்லவன் பல்லவி என்னும் துவங்கும் பாடல்.  அதில் சில வரிகள் ...

இந்த இரண்டுமே ராகம் நீலாம்பரி யை அடிப்படையாக கொண்டவை.

இந்த ராகத்தில் அமைந்த தியாகராஜர் கிருதி ஒன்றை முதலில் கேட்போம்.

பாடுபவர் மகாராஜபுரம் சந்தானம் அவர்கள்.



நீலாம்பரி ராகம்
29 தீர சங்கராபரணம் ஜன்யம்.

Aa: S R2 G3 M1 P D2 P N3 S
Av: S N3 P M1 G3 R2 G3 S

இந்த ஸ்வரங்களில் நிஷாதம் இருக்கிறதே, அது அன்ய ஸ்வரம். அதனால்தானோ என்னவோ அந்த நளினம், மென்மை, வாத்சல்யம் ததும்பும் அந்த கருணை  இந்த ராகத்தில் நிதர்சனமாக தெரிகிறது.

இதயத்தை நெகிழ வைக்கக்கூடிய பற்பல பாடல்கள், இசை மேதைகளின் கிருதிகள் இந்த ராகத்தில் இருக்கின்றன.


கேரளா நாட்டின் மிகச் சிறந்த சாஹித்த்ய கர்த்தா ஆன சுவாதி திருநாள் அவர்களின் ஒரு சாஹித்யத்தை பிரபல பாடகி chinna kuyil சித்ரா பாடுகிறார் கேழுங்கள்.

Kanthanodu chinnam illai... Swathi Tirunal ...chithra sings.
Language: Malayalam./



ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் அவர்களின் " எப்படித்தான் என் உள்ளம் புகுந்து என்னை அடிமை கொண்டீரோ சுவாமி " என்னும் பாடல் எல்லோரையும் கவர்ந்த ஒன்றாம்.
இந்த பாடல் எனது வலை நண்பர் ஜீவா அவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

pallavi

yeppaDittan yen uLLam pugundenai aDima konDeerO (swaamy)
isai tarum kuzhaloDu kunDalam oLira
ivai tarum suvaiyoDu vaDinamurala
(yeppaDi)

anupallavi

oppuyar illaada uttamanE - oru
uraga naDamaaDum vittaganE
ulagirunda vaay tirandapaDiyO
alladu uraloDu piNaindirrundapaDiyO
(yeppaDi)

caraNam

veLiyil solla manam tuLLudE
solla vENum vENum yenDra aasai koLLudE
kuLiroli mugam kanDu naaNi naaNi - un
koi malar paaDattil yennai taLLudE

inioru ulagam unaittavira yenakkoru sugam illai yenatandavaa
tanioru muDi mEl iLa mayilaanadi taru tOgaiaNiya tandavaa
uriyEri kaLavaaDi tOzharoDu unak yenak kenat tinDravaa
oorariyum munbu annaiyiDam senDru onDrum ariyaadu ninDravaa
(yeppaDi)
Courtesy: www.karnatik.com

நீலாம்பரி ராகத்தில் லல்லபி மிகவும் பிரசித்தம். லல்லபி என்றால் தாலாட்டு. பாம்பே ஜெயஸ்ரீ பாடியது. மன்னு புகழ் கோசலை தன மணி வயிறு ..என்று துவங்கும் பாடல் நம் எல்லோரையுமே நித்திரையில் ஆழ்த்திவிடும்.   நான் கூட அடிக்கடி நினைப்பேன்  இந்த நீலாம்பரி ராகம் பாடி  தூக்கம் வராதவர்களுக்கு கூட தூக்கம் வரப்பண்ணி விடலாமே..இதை விட ஒரு ரிலக்சன்ட் உண்டோ ? அல்ப்ராக்ஸ் மாத்திரை எதற்கு என்று !!! என்ன செய்வது ? நீலாம்பரி எங்கம்மா பாடுவா பாருங்கோ !! கேட்டுண்டே இருக்கலாம். 
 இன்றைய நாட்களில்,  இளைய தலைமுறையில் ஒரு இனிய குரல் என்னை அதிசயிக்க வைத்தது. கவனிச்சு,  காது கொடுத்து கேட்டேன். . 
அந்த குரலில் ஒரு கம்பீரம், அதே சமயம்,  தைவீகம் இருக்கிறது. ஒரு divinity தென்படுகிறது. அந்த குரல் இப்பொழுது அந்நிய சங்கீதங்களிலும் ஒலிக்கச் செய்கிறது.  அந்த குரல் சுபிக்ஷா ரங்கராஜன் அவர்களுக்குச் சொந்தம். அவர்கள் குரலில் நீலாம்பரி இங்கே கேட்கவும்.


கர்நாடிக் கிளாசிகல் ராகங்களில் நீலாம்பரியின் இடம் மதிப்பிற்கு உரியது.
ஆயிரம் தரம் ஆலாபனை கேளுங்கள்.  அலுக்காது.


No comments: