Pages

Thursday, April 24, 2008

Nattakurinji

Nattakurinji
This belongs to:
28 harikAmbhOji janya
Aaroganam and Avaroganam are as follows:

Aa: S R2 G3 M1 N2 D2 N2 P D2 N2 S
Av: S N2 D2 M1 G3 M1 P G3 R2 S

இந்த ராகத்தில் அமைந்த ஒரு பாடல் ரஞ்சனி காயத்ரி சேர்ந்து பாடுகிறார்கள். நந்தனார் சரித்திரத்தில் அமைந்த ஒரு நிகழ்ச்சி. கோபால கிருஷ்ண பாரதி இயற்றிய பாடல்.



அனேகமாக கர்னாடக சங்கீதத்தில் விருப்பமுள்ள அனைவருமே " பாவயாமி ரகுராமம் " என்னும் ராகமாலிகையைக் கேட்காமல் இருந்திருக்க மாட்டார்கள். டாக்டர் எம்.எஸ். அவர்கள் பாடிய இசைஒலித்தட்டு
ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறது என்றால் அது மிகையாகாது. அப்படிப்பட்ட ஒரு கீர்த்தனையின் முதல்
சரணம் நாட்டக் குரிஞ்சியில் அமைந்துள்ளது.

Songs:
bhAvaiyAmi (caraNam 1)

dinakaraanvayatilakam | divyagaadhi sudasavanaa ||
vanaracitasubaahumukha- | vadamahalyaa paavanam ||
anaghameeSaSaapapangam | janakasudaapraaNeSam ||
ghanakupithabhruguraama | garvaharamithasaakEtam ||

இந்த ராகத்தில் இருக்கும் கீர்த்தனைகளை ஒரு பட்டியல் கொடுக்கிறது. கர்னாடிக்.காம் எனும்
வலை தளம்.
www.karnatik.com
dharma samvarttani tAyE - PS
EDanunnADO - BR
ekkAlattilum
eppOdu varuvAyO - SNB
kuvalayadaLa - T
manasu vishhaya - T
nAkabhaya varamosagi - GNB
nityaklinnE - HB
O dhavanEshwara - T
pAlvaDiyum mugam - OV
pArvatikumAram - D
paripAhi dayAkara - TSV
tillAnA (dhIm dhIm tanana) - RS

1942ல் தமிழ் நாட்டில் சுமார் 2 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து ஓடிய படம் சிவகவி. இதில் எம்.கே.தியாகராஜ பாகவதர் தமது குரல் வளத்தினாலேயே சங்கீத ரசிகர்கள் மனதில் குடி கொண்டவர். "கவலையைத் தீர்ப்பது
நாட்டியக் கலையே " என்னும் பாடல் இன்னமும் அதாவது 55 வருடங்களுக்குப்பின்னும் சங்கீதக் கச்சேரிகளில்
பாடப்பெறுகிறது. நாட்டக்குறிஞ்சி ராகத்திற்கே இது நல்ல ஒரு உதாரணம் ஏன் எனின் இந்த ராகத்தின் மற்ற பரிமாணங்களும் வெகு நேர்த்தியாகக் கையாளப்படுவதே.


Other scales: S R2 G3 M1 D2 N2 S - S N2 D2 M1 G3 S, S R2 G3 M1 N2 D2 N2 P D2 N2 S - S N2 D2 M1 G3 M1 P M1 க்3 ற்ற்2 ஸ்


பாடலை இயற்றியவர்: பாபநாசம் சிவன் .
இசை: G ராமனாதன்
என்ன அழகான சாகித்யம் பாருங்கள்:

கவலையைத் தீர்ப்பது நாட்டியக்கலையே
கணிகையர் கண்களே மதன்விடும் வலையே
நவரஸங்களிலும் சிருங்காரமே தலைய
நளின நடையழகிற் கீடெங்கும் இல்லையே

புஜமிரண்டு மூங்கில் தளர்நடை யஞ்சி
புருவம் இடையுடலும் வளையுமே கெஞ்சி
ரஸிகத் தன்மையில் கைதேர்ந்தவன் வஞ்சி
ராகத்தில் சிறந்தது நாடக்குறிஞ்சி

இந்த ராகத்தின் முழு பிரதிபலிப்பை சமீபத்தில் வந்த சினிமா பாடல் " கண்ணாமூச்சி ஏனடா?" என்ற பாடலில் காண முடிகிறது. கண்டுகொண்டேன் என்னும் திரைப்படத்தில் வந்த இப்பாடல் பெரிய ஹிட் ஆனதில்
ஐயம் ஏதும் இல்லை.




ஆன்மீக வலைத்தளம்
www.kaumaram.com
காணப்பெறும் கேட்கப்பெறும் ஒரு திருப்புகழ் இந்த ராகத்தில் அமைந்துள்ளது.
அற்புதமாக உள்ளது. Please click below.
hiraivanja iruvinaigaL narai anga malam azhiya
sivagangai thanil muzhugi ...... viLaiyAdi

sivam vandhu kudhikoL aga vadiundran vadivamena
thigazh aNdar munivargaNam ...... ayan mAlum

aran maindhanena kaLiRu mukan embiyena magizha
adiyenkaN aLiparava ...... mayilERi

ayil koNdu thiru natanam ena thandhaiyudan maruvi
arumantha poruLaiyini ...... aruLvAyE

pariyenba narigaL thamai natanangkod oruvazhudhi
parithunja varu madhurai ...... NadarAjan

pazhiyanji enadharugil uRai puNdarika vadiva
pavaLansol umai kozhunan ...... aruL bAlA

iruL vanjagiri avuNarudan engaL iruvinaiyum
eriyuNdu podiya ayil ...... viduvOnE

enadhanbil uRaisayila magizh vanji kuRamagaLo
deNu panjaNaiyin maruvu ...... perumALE.


Saturday, April 12, 2008

ராகமாலிகை

வெகு நாட்களாக, ஏன் ? மாதங்களாக ராகமாலிகை பற்றி எழுதவேண்டும் என
நினைத்துக்கொண்டிருந்தேன். ஜீவா அவர்களின் 'என் வாசகம்" பதிவு ஒன்றின் மூலம் கடலூர் சுப்பிரமணியத்தின் பாடல்கள் கிடைக்கப்பெற்றேன்.

அவர் ஒரு ஜீனியஸ் என்றே சொல்லவேண்டும். அவரது பாடல்கள் பிரபல பாடகிகள் எம்.எல்.வி. மற்றும் டி.கே. பட்டம்மாள் அவர்களால் பாடப்பெற்றவை. சமீபத்தில் திருமதி நித்யஸ்ரீ அவர்கள் ' ராகத்தில் சிறந்தது கல்யாணியா..காம்போதியா " எனும் ராகமாலிகை தனை மிகவும் அற்புதமாகப் பாடியிருப்பதைக் கேட்டேன். இதில் கிட்டத்தட்ட 40 ராகங்களை இணைத்திருக்கிறார்கள்.

ராகமாலிகைக்கு என்று இலக்கணம் ஒன்று உண்டா ? அல்லது அவரவர் கற்பனை, திறன், ராக அறிவு இவற்றை மற்றுமே பொருத்துள்ளதா என பல நேரங்களில் ஆராய்ந்திருக்கிறேன். எந்த ராகத்தை வேண்டுமானாலும் இன்னொரு ராகத்தோடு சேர்க்கலாமா அல்லது இதற்கெனத் தனியாக ஏதேனும் விதிகள் இருக்கின்றனவா எனப்பார்த்தேன்.





ராகமாலிகா குறித்தும் ராகமாலிகையில் பாடப்பட்ட வெகுவாக விரும்பிக்கேட்கப்படும் பாடல்கள் குறித்து இங்கே சொல்லப்படுகிறது.



திரு. சஞ்சை சுப்பிரமணியன் ஒரு விருத்தத்துடன் துவங்குவோம்.
sanjay subramanian ragamalikai




நான் பிறந்த வருடம் 1942. உலகப்போர் நடந்து கொண்டிருந்தது. தமிழ்த்திரை வானில் எம்.கே.தியாகராஜ பாகவதர் கொடி கட்டிப் பறந்த காலம். அந்த காலத்தில்
கதா நாயகர் ஹீரோவுக்கு பாடவும் தெரிந்திருக்கவேண்டும். எம்.கே.டி. தம் குரல்
வளத்தினால் அந்த காலத்து ரசிகர்களை மயக்கினார் என்றால் மிகையாகாது.
இதோ ! சிவ கவி என்னும் படத்தில் ஒரு காதல் காட்சி. ( அந்த காலத்து காதல்
காட்சி இது ! )
ராக மாலிகைக்கு தமிழ்த்திரையில் முதல் உதாரணம்.

Beautiful song..ragam...from Sivakavi (1942)..ft Bhagavatar and S Jeyaletchum




பிரியா சகோதரிகள் ராகமாலிகையில் பாடுவது இனிமையிலும் இனிமை. அய்யே மெத்த கடினம் என்று புன்னாக வராளியில் துவங்கும் பாடல் இது. கேட்டு தூங்கிப் போய்விடாதீர்கள்.

ayee metha .. priya sisters




அடுத்து அருணா சாயிராம் ஒரு அழகான விருததம் பாடுகிறார்கள். பாடலில் ஷண்முகப்பிரியா, சஹானா, ஹம்சாநந்தி மற்றும் சிவ ரஞ்சனி ராகங்கள் சங்கமம்.

aruna sairam .. virutham
RAgams: shaNmukhapriya, sahAnA, hamsAnandi, shivaranjani



ஒரு மாறுதலுக்காக, ஸ்வாமி ஹரிதாஸ் கிரி அவர்களின் பஜன் தருகிறேன். இதுவும் ராகமாலிகையில் தோடி, பிலஹரி சேர்ந்துள்ளது. இதில் பக்தி பாவம் பிரதானம்.

Swami Haridass Giri thodi bilahari


மறைந்த மாமேதை டாக்டர் எம்.எஸ்.சுப்பலக்ஷ்மி அவர்கள் ஐ. நா. சபையில் பாடியது. மைத்ரீம் பஜத. எல்லா தேசங்கள், மக்களிடையே நல்லுரவு அமையவேண்டும் என்பதை பல ராகங்கள் எப்படி இணைகின்றனவோ அதுபோல இருக்கவேண்டும் அந்த நட்பு என்பதை சொல்லாமல் சொல்லி விளங்க வைக்கிறார்கள்.
Dr.M.S. maithrim bhajatha


Now Listen to Smt.M.L.V singing in Raghamalika
Sri Viswanatham bhajeham
http://www.musicindiaonline.com/p/x/zqb2rgka4t.As1NMvHdW/?done_detect

raghathil sirandhathu kalyaniya kambodiya..
Smt.Nithyashree almost keeps us spellbound by articulating a ragha malika with almost 40 to 45 different raghas. A master piece indeed !
Composed by Sri Kadalur Subramanian.
http://www.musicindiaonline.com/p/x/xJm251BVPd.As1NMvHdW/