நான்: இன்று சாமா அல்லது ஷ்யாமா எனச் சொல்லப்படும் கர்னாடிக ராகத்தைப்பற்றி கொஞ்சம்
பேசுவோமா?
சகதர்மிணி: சாமா என்றவுடனே எல்லோரும் அந்த சாந்த மூலேகா பாட்டைப்பத்தி தானே சொல்லுவா?
நீங்க ஏதேனும் ஒரு மாற்றமா சொல்லப்போறேளா ?
நான்: இது ஒரு மென்மையான ராகம். 28வது மேள கர்த்தாவைச்சேர்ந்த ஹரிகாம்போஜி ஜன்யமாகக்
கொண்டது. இதிலே ஒரு ஆச்சரியம் என்னவென்றால் ஆரோகணம் அவரோகணம் ஒன்று என்றால், பிரயோகங்கள் மூலமாகத்தான் இதனுடைய மென்மை தெரியவரும்.
இல்லாள்: உதாரணத்திற்கு ஒன்று ஊதுங்களேன்:
நான்: கண்டிப்பாக. அந்தக்காலத்து மிஸ்ஸியம்மா பாட்டினைக் கேட்போமா: அழகான ஜெமினி கணேசன்.
அடக்கமும் அழகும் சேர்ந்து அதில் நாணத்தினையும் மஞ்சள் மாதிரி பூசியது போல் இருக்கும் சாவித்திரி.
அதற்கு ஏற்றாற்போல், குரல். ராஜா சுசீலா. கொஞ்ச நேரம் கேட்போம்.
இந்த ராகத்தினை இவ்வளவு மென்மையாக ஒரு மெல்லிசை அமைத்தது அற்புதம் தான். இது சாமா தானோ என்று வியப்புறச் செய்யும்போது, அதே ராகத்தில் என் மருமான் ஸ்ரீமான் மதன் ஸீ.ஏ. பாடியதும் கேட்டால் தான் இந்த ராகத்தின் நளினம் தெரியவருகிறது.
இப்போது சங்கராபரணத்தில் அந்த சாம ராகத்தின் ஸ்வரங்கள் எப்படி இழைகின்றன என்று கவனியுங்கள்.
manasa sanchara re
www.youtube.com/watch?v=Nt7Aeb9zzbw
அதே ராகத்தில் திருமதி சங்கீதா அவர்கள் பாடிய பாடலும் அதைத் தொடர்ந்து ஒரு தீக்ஷிதர் க்ருதியும் வருகின்றன.
Annapurne Visalakshi..Sangeetha ..Raag Sama
www.musicindiaonline.com/p/x/GUb2.PYrk9.AS1NMvHdW/
இந்த ராகத்தின் அரோகண, அவரோகணம் பின்வருமாறு:
shyAmA (sama, sAma)
28 harikAmbhOji janya
Aa: S R2 M1 P D2 S
Av: S D2 P M1 G3 R2 S
இதில் அமைந்த க்ருதிகள் ;
இதில் உருவான அல்லது தழுவிய சினிமா பாடல்கள்
Songs:
annapUrNE vishAlAkshi - D
eTulaina bhakti - T
guruvAyupurEsha - TSV
maravakavE O manasA - PSA
kAttirukkinrEn en ayyA - SNB
mAnasa sancararE
nimishamaina
parAtparE - HB
sAma priya - HB
shAntamu lEka - T
shivaparAdhamu - T
shiva shankara pAhi - TSV
shrI vishwanAtam bhajEham 7
varuvArO varam taruvArO
Film songs:
brindAvanamum nandakumAranum (missiyammA)
inru manaduLLamE (tangappadumai)
ini evvAru marappEn (ambikApati)
mAnasa sancararE (shankarAbharaNam)
mAtarin kalvigaL payinriDuvEn (Adittan kanavu)
mownattil viLaiyADum manasATshiyE (bAlamuraLi
krishNA)
mownattil vilayADum mana sAtciyE (nUl veli)
nAn pADikkoNDE iruppEn (sAmA)
nAn pADikkoNDE iruppEn (sirai)
pArttasArati avan pAdamE gati (sIrkazhi
gOvindarAjan)
shAntamulEka soukyamu lEdu (tyAgaiyA
shankarAbharaNam)
tamizhAna deyvandAn enra pATTil vallinam
tanaikkUrum (sIrkazhi gOvindarAjan)
tripura sundari - rUpakam (dikshitar)
Another scale for this rAga:
S R2 G3 S R2 P M1 D2
D2 S - S D2 P M1 G3 R2 S
பிரயோகம் கொஞ்சம் நீட்டியும் இருக்கும்.
என்ன ரசித்தீர்களா?
ஒரு பதில் போடுங்களேன்.
என்னது இவ எங்க காணோம் ?
ஓ..தூங்கிப்போயிட்டாளா?
2 comments:
ஆகா, ஷ்யாமா ரொம்ப நல்லா இருந்தது சார்.
ஸ்ரீமான் மதன் நல்லா பாடி இருக்கிறார்.
கோபாலகிருஷ்ண பாரதியின் இன்னொரு ஷ்யாமாவான - 'வருவாரோ, வரம் தருவாரோ' பாடலும் எனக்குப் பிடித்த ஷ்யாமா. அதன் சரணங்கள் அப்படியே 'மானச சஞ்சரரே..'வை தழுவி இருக்கும்!
இசை இன்பத்தில் முன்பொருமுறை ஷ்யாமா பதிவு இங்கே
I cannot agree more regarding the melodius sama raagam......it is definitely one of my favourites and i can never get bored of it....brindavanamum romba azhagana paadal.....aana idhu durga va irukumonu oru sandhegam.....enakku eppothum indha durga, sama and sudha saveri mathiyil konjam confusion. Please clarify when you find time.
Thanks,
Dilip
Post a Comment