அந்த காலத்திலே மிகவும் பிரபலமாகி, தெருவுக்குத் தெரு, முலைக்கு மூலை, பாடப்பட்ட பாடல் இது. இது காம்போதி ராகத்தில் அமையப்பெற்றது. ஜி. என். பி. பாடுகிறார்.
இந்த ராகத்தின் ஜன்யம் : 28 harikAmbhOji janya
ஆரோஹனம் : S R2 G3 M1 P D2 S
அவரோஹனம் : : S N2 D2 P M1 G3 R2 S N3. P. D2. ஸ்
ஒரு கச்சேரி என்று சொன்னால், காம்போதி ராகம் கண்டிப்பாக இருக்கும். இது ஒரு கம்பீர ராகம் ஆகும். ஆரோஹணத்தில் நிஷாதம் இல்லை.
இந்த ராகத்தில் ஒரு அழகான கீதம். சங்கீதம் கற்றுக்கொள்ள துவங்கும்போழுது வர்ணம், கீதம் எல்லாம் சொல்லி தருவார்கள். அவற்றில் முக்கிய இதயத்தைப் பெற்றுள்ள
மந்தர தரரே எனும் கீதம் கேழுங்கள் இங்கே.
http://www.karnatik.com/c2712.mp3
திருவடி சரணம் என்று நான் நம்பி வந்தேன் என்ற பாடல் காம்போதி ராகத்தில் அமைந்ததை இப்போது கேட்போம். மதுரை மணி ஐயர் பாடுகிறார்.
thiruvadi charanam endru naan nambi vandhen
madurai mani iyer
இதே பாடலை, இன்றைய முன்னணி பாடகி அருணா சாயிராம் பாடும்போது கவனியுங்கள். முதலில் வயலின் ஆலாபனை.
violin alapana
மரி மரி நின்னே பாட்டு நினைவு இருக்கிறதா ? அது காம்போதி ராகம்.
இங்கே இன்றைய இசை மேதை பால முரளி கிருஷ்ணா ராகத்தை விஸ்தாரமாக பாடி பிறகு இந்த தியாகராஜ கீர்த்தனை தனை பாடுகிறார். மா ஜானகி கீர்த்தனை கேட்க விருப்பம் இருப்பவர்கள் பதிவின் தலைப்பை சொடுக்கவும். அடுத்தது, யேசுதாஸ் பாடுகிறார் இதே ராகத்தில். குழல் ஊதுகிறாரா அல்லது பாடுகிறாரா ? கேட்பவர்கள்தான் சொல்லவேண்டும்.
1 comment:
'எனை மறந்த' என்னுடைய தாத்தா பாடுவார்.. அவர் குரலில் அறுபதுகளில் கேட்ட பிறகு அசல் பாடலை இன்று தான் கேட்கிறேன். மிக மிக நன்றி.
Post a Comment