Pages

Saturday, October 09, 2010

Sri kamalambike .. Raag Sri thalam : kanta . MUTHUSWAMI DIKSHITHAR KRITHI

கர்நாடக சங்கீத உலக சரித்திரத்தில் அழியாப்புகழ் அடைந்த மேதை ஸ்ரீ முத்துசாமி தீட்சிதர் அவர்களின் கிருதி ஒன்று இங்கே இன்று நவராத்திரி நாட்களில் தருவதில் பெருமை அடைகிறோம்.   அவர் இயற்றிய சிவ ஸ்துதிகள் இங்கே இருக்கின்றன.அவரைபற்றிய முழுத் தகவல்கள் மற்றும் இயற்றிய கிருதிகள் இங்கே பார்க்கலாம். சில கேட்கலாம்.










ராகம்: ஸ்ரீ தாளம்: கண்ட

ஸ்ரீ கமலாம்பிகே சிவே பாஹிமாம் லலிதே
ஸ்ரீ பதிவிநுதே ஸிதாஸிதே சிவஸஹிதே

சரணம்:

ராகா சந்த்ரமுகீ ரக்ஷித கோலமுகீ
ரமா வாணி ஸகி ராஜயோக ஸுகீ
ஸாகம்பரி ஸாதோதரி சந்த்ரகலாதரி
ஸங்கரி ஸங்கர குருகுஹ பக்தவஸங்கரி
ஏகாக்ஷரி புவனேஸ்வரி ஈஸப்ரியகரி s
ஸ்ரீ -சுககரி ஸ்ரீ மஹாத்ரிபுரஸுந்தரி!!

தமிழாக்கம் திரு டி. ஆர். சி. அவர்கள். நன்றி. அவர் வலைக்குச் செல்ல இப்பதிவின் தலைப்பை கிளிக்கவும்

திருவாரூர் எனும் கமலாலயத்தில் வாழும் கமலாம்பிகையே. லக்ஷ்மியின் கணவனான விஷ்ணுவினால் வணங்கப்படுபவளே. வெண்மை, கருமை ஆகிய இரண்டு நிறங்களுக்கு உரிய கௌரி துர்கையாய் காட்சித் தருபவளே. சிவபிரானோடு இரண்டறக் கலந்தவளே. லலிதா தேவியே.ஸ்ரீ கமலாம்பிகையே. மங்களங்களை அருள்பவளே. என்னைக் காப்பற்றுவாயாக.

பௌர்ணமி நிலவைப் போன்ற முகத்தை உடையவளே. வராஹ முகமுடைய திருமாலை ரக்ஷித்தவளே. லக்ஷிமியும் ஸரஸ்வதியும் உனக்கு தோழியிராக விளங்கும் பெருமை பெற்றவளே. ராஜ யோகம் எனும் உன்னத சுகத்தில் ஆழ்ந்து திளைப்பவளே. சாகம்பரீ என அழைக்கப்படும் வன துர்கைஅன்னையே. மெல்லிய இடையைக் கொண்டவளே. சந்திரனுடைய இளம் பிறையை ஆபரணமாகத் தரித்தவளே. சங்கரன், குழந்தை முருகன், மற்றும் உனது அடியார்களுக்கு வசப்படுபவளே. ஹ்ரீம் என்னும் ஓரெழுத்தில் உறைபவளே. உலகத்தின் ஒரே ஒப்பற்ற தலைவியே. கையிலைநாதனுக்கு பிரியமானவளே. சகல ஐஸ்வர்யங்களையும் மட்டில்லா சுகத்தையும் அருளும்படி செய்பவளே. ஸ்ரீ மஹாத்ரிபுரசுந்தரியே ஸ்ரீ கமலாம்பிகையே என்னைக் காப்பாற்று தாயே.
நன்றி:
http://trc108umablogspotcom.blogspot.com/2008_10_01_archive.html


No comments: