
ennaiyum Paripali Giridhari.
வலையுலக நண்பர் mr.jeeva venkataraman sir கிரிதாரி கோபாலுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.
ஹே ! கிரிதாரி ! சக்ரதாரி ! உபஹாரி !!
என்னை நீ பரிபாலி ! அப்படின்னு ஒரு சுகமான பாட்டையும் தொடுத்து போட்டு இருக்கிறார்.
கிரிதாரி ஸார் ! நீங்கள் வரும்போது ஜீவா மட்டுமல்ல, என்னையும்
சேர்த்து பரிபாலிக்கவேண்டும்.
மற்றும் கவி நயா, அகரம் அமுதா, க்ருத்திகா, ராமலக்ஷ்மி, திவா,
குமரன், மதுரையம்பதி, ஜீவி, துளசி அம்மா, அது யார்? ஆமாம் ஐ ஆம்
ஹனுமான், Auditor Sir தி ரா ச , அவர் யாரு அந்த மாதவிப் பந்தல் வலையுலக
சொந்தக்காரர் அவர், மற்றும்
சிதம்பரம் கோவிலைப்பற்றி எழுதினார்களே ! பேர் என்னா மறந்து போச்சே !
அவங்க வலைக்கு ப்போய் படித்தும் ரொம்ப நாளாச்சு, என்னது பேரு !!
ராமாயணக்கதை கூட விளக்கமா எழுதினாங்களே, சரி, நினைவுக்கு வல்லே
வந்த உடன் சொல்றேன், இப்போதைக்கு அவங்க,
அப்பறம் மேடம் முத்துலக்ஷ்மி, அவங்களோட மகளிர் சக்தி அத்தனை
ஃப்ரென்ட்ஸ், எனக்குத் தெரிந்தும் தெரியாமல் இருக்கிற தமிழ் வலை
அன்பர்கள் நண்பர்கள்
இப்படி எல்லாரையும் பரிபாலிக்க அவசியம் வா.
உன் வரவை எதிர் நோக்கியிருக்கும்
சுப்பு தாத்தா.
ஒரு வேளை நீ வரும்போது கிரிதர கோபாலன்னு இந்த பாடலைக் கேட்டுண்டு
சுகமாக நாங்கள் தூங்கிட்டிருந்தாலும், நீ எங்களை தட்டி எழுப்பி
பரிபாலி.
Please click and experience DIVINITY
http://www.musicindiaonline.com/p/x/Bqp2SRGiq9.As1NMvHdW/?done_detect
http://www.musicindiaonline.com/p/x/fqC2_dqNPd.As1NMvHdW/?done_detect
1 comment:
//ஒரு வேளை நீ வரும்போது கிரிதர கோபாலன்னு இந்த பாடலைக் கேட்டுண்டு
சுகமாக நாங்கள் தூங்கிட்டிருந்தாலும், நீ எங்களை தட்டி எழுப்பி
பரிபாலி.//
அதானே, நல்லாச் சொன்னீங்க!
//இப்படி எல்லாரையும் பரிபாலிக்க அவசியம் வா.
//
அதானே!
Post a Comment